Delhi Capitals vs Mumbai Indians மும்பை அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

Delhi Capitals vs Mumbai Indians மும்பை அணிக்கு 173 ரன்கள் இலக்கு!
X
மும்பை அணி வெற்றி பெற 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


ஐபிஎல் 2023 சீசனின் 16வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொண்டு வருகிறது. டெல்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

டெல்லி அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை கையிலெடுத்த வார்னரும் பிரித்வி ஷாவும் ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டு வந்தனர்.

4 வது ஓவரில் ஷோகீன் பந்து வீச்சில் கேமரூன் க்ரீன் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பிரித்வி. இவருக்கு பிறகு மனிஷ் பாண்டே வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் கொஞ்சம் நேரம் நிலைத்து நின்று ஆடினார்கள். 33 ரன்களிலிருந்து இவர்கள் இருவரும் 76 ரன்களுக்கு அணியை தூக்கி செல்லும் வழியில், 9வது ஓவரில் அவுட் ஆனார் மனிஷ் பாண்டே.

பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் பெரெண்டார்ஃபிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து யாஷ் துல்லும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அவர்

நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் அடுத்தடுத்து ரோமன் பவல், லலித் யாதம் ஆகியோர் அவுட் ஆகி வெளியேற, அக்ஸார் படேல் களத்துக்கு வந்தார்.

டேவிட் வார்னர், அக்ஸார் படேல் இருவரும் டெல்லி அணிக்கு நல்ல ஸ்கோரை கொண்டு வந்தனர். 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவர் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின்னர் போட்டி அப்படியே விழுந்துவிட்டது. டெல்லி அணியால் அதற்கு பிறகு 10 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை.

19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி 172 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணி தொடக்கம் முதலே அதிவிரைவு ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.

ஆட்டம் நடைபெறும் இடம் DC vs MI Venue

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இந்த ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

DC vs MI Head to Head

ஐபிஎல்லில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் 32 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்த 32 ஆட்டங்களில் டெல்லி 15ல் வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது.

DC vs MI Playing 11

Delhi Capitals Confirmed Playing 11:

1- Prithvi Shaw, 2- David Warner(c), 3- Manish Pandey, 4- Yash Dhull, 5- Rovman Powell, 6- Lalit Yadav, 7- Axar Patel, 8- Abishek Porel(w), 9- Kuldeep Yadav, 10- Anrich Nortje, 11- Mustafizur Rahman

டெல்லி கேபிடல்ஸ் :

1- பிருத்வி ஷா, 2- டேவிட் வார்னர்(கேட்ச்), 3- மணீஷ் பாண்டே, 4- யாஷ் துல், 5- ரோவ்மன் பவல், 6- லலித் யாதவ், 7- அக்சர் படேல், 8- அபிஷேக் போரல் (வ), 9- குல்தீப் யாதவ் , 10- அன்ரிச் நார்ட்ஜே, 11- முஸ்தாபிசுர் ரஹ்மான்

Mumbai Indians Confirmed Playing 11:

1- Rohit Sharma(c), 2- Ishan Kishan(w), 3- Cameron Green, 4- Suryakumar Yadav, 5- Tilak Varma, 6- Nehal Wadhera, 7- Hrithik Shokeen, 8- Riley Meredith, 9- Arshad Khan, 10- Piyush Chawla, 11- Jason Behrendorff

மும்பை இந்தியன்ஸ் :

1- ரோகித் சர்மா(கேட்ச்), 2- இஷான் கிஷன்(டபிள்யூ), 3- கேமரூன் கிரீன், 4- சூர்யகுமார் யாதவ், 5- திலக் வர்மா, 6- நேஹல் வதேரா, 7- ஹிருத்திக் ஷோக்கீன், 8- ரிலே மெரிடித், 9- அர்ஷத் கான் , 10- பியூஷ் சாவ்லா, 11- ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

Tags

Next Story
how ai is transforming business intelligence