டேவிட் வார்னர் நினைச்சா போதும்.. இந்த 5 சாதனைகளையும் தவிடுபொடியாக்கலாம்!
ஐபிஎல் 2023 இதோ வந்துவிட்டது. சிக்ஸர்கள் பறக்க பந்துகள் தெறிக்க சாதனைகள் படைக்க வீரர்கள் அணி திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பேட்ஸ்மென், பவுலர் என்று இல்லாமல் வீரர்களாக எத்தனையோ சாதனைகள் ஒவ்வொரு முறையும் படைக்கப்பட்டு வருகின்றன. அதில் சில சாதனைகளைப் படைத்தவர்தான் டேவிட் வார்னர்.
பிறந்தது ஆஸ்திரேலிய மண்ணாக இருந்தாலும் சமீபத்திய வருடங்களில் இவர் இந்தியராகவே நினைக்கப்படுகிறது. உண்மையில் இந்திய மண் மீது இவருக்கும், இவர் மீது இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த அன்பு இருக்கிறது.
டேவிட் வார்னர் இப்போது இன்னொரு அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்த இருக்கிறார். ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருக்கப்போகிறார் டேவிட் வார்னர். இவர் கண் முன் 5 சூப்பரான சாதனைகள் இருக்கின்றன. கண்டிப்பாக டேவிட் வார்னர் இதனை எட்டிப் பிடித்து முறியடித்து சாதனை படைப்பார்.
இதுவரை ஐபிஎல்லில் 162 போட்டிகளில் விளையாடி 140.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5881 ரன்களையும் பெற்றிருக்கிறார். 42 ரன்கள் சராசரியையும் கொண்டு குறைந்தது ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்களுள் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். 55 முறை அரை சதம் அடித்துள்ள இவர் கணக்கில் மொத்தம் 4 சதங்களை வைத்துள்ளார்.
சாதனை 1
டேவிட் வார்னர் முறியடிக்க வேண்டிய முதல் சாதனை அவர் இந்த தொடரில் 119 ரன்களைக் கடந்தால் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. 6000 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க டேவிட் வார்னர் இந்த ரன்களை எடுக்க வேண்டும். இதுவரை 6624 ரன்களுடன் விராட் கோலியும் 6244 ரன்களுடன் ஷிகர் தவானும் இருக்கின்றனர்.
சாதனை 2
இருவேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து இரண்டு அணிகளையும் ஃபைனல் அழைத்துச் செல்வது, கோப்பையை வெல்லச் செய்வது என்கிற சாதனை படைக்க காத்திருக்கிறது. வார்னர் நினைத்தால் இந்த முறை கோப்பையை வென்று அந்த சாதனையைப் படைக்க முடியும்.
இதுவரை வார்னர் இடம்பெற்றிருந்த அணி 69 முறை வென்றிருக்கிறது. அதில் 35 முறை அவரே அணிக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
இரு அணிகளிலும் 2 ஆயிரம்
இரண்டு அணிகளில் விளையாடி இரு அணிகளுக்காகவும் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்கிற பெருமையை படைத்து ஷிகர் தவானுடன் இணையும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஷிகர் தவான் ஹைதராபாத், டெல்லி அணிகளுக்காக விளையாடி இரு அணிகளுக்காகவும் 2 ஆயிரம் ரன்களைக் கடந்திருக்கிறார். இப்போது வார்னரும் அதற்காக காத்திருக்கிறார். முதல் ரன்னை அடித்த உடனேயே இந்த சாதனையை அவர் படைப்பார்
ஆரஞ்சு கோப்பை
ஒருமுறைக்கு அதிகமாக ஆரஞ்சு கோப்பையை வென்ற வீரர் டேவிட் வார்னர் மட்டும்தான். இதுவரை விளையாடிய சீசன்களில் 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆரஞ்சு கோப்பையை வென்றிருக்கிறார்.
அதிகபட்ச தனிநபர் ஒரு சீசன்
ஒரு சீசனில் தனிநபர் ஒருவர் எடுத்த அதிக ரன்கள் 848 இதுவரை வேறு எந்த நபர்களும் இந்த சாதனையை படைக்கவில்லை. இது வார்னரிடமே இருக்கும் சாதனை
அதிகபட்ச 500
இதுவரை நடந்த சீசன்களில் அதிகமுறை 500 ரன்களைக் கடந்த வீரர் டேவிட் வார்னர்தான். 6 சீசன்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
அதிக டி20 நூறுகள்
உலகிலேயே அதிக டி20 சதங்கள் அடித்தது கிறிஸ் கெய்ல் மட்டும்தான். அவர் 22 முறை சதமடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து கிளிங்கர், பாபர் அசாம், பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் 8 முறை சதங்கள் அடித்து 2 வது இடத்தில் இருக்கின்றனர். இந்த முறை சதமடித்தால் வார்னர் 2 வது இடத்தைப் பெறுவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu