காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்
X
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: ஸ்ரீகாந்த், சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்; குத்துச்சண்டையில் அமித்திற்கு பதக்கம் உறுதி

பேட்மிண்டன், ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 16வது சுற்றுக்குள் நுழைந்தார். ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-9, 21-9 என்ற கணக்கில் டேனியல் வாங்கலியாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறினார்

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மாலதீவின் பாத்திமத் நபாஹாவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் 48 கிலோ-51 கிலோவுக்கு மேல் (பிளைவெயிட்) பிரிவில் ஸ்காட்லாந்தின் லெனான் முல்லிகனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அமித் பங்கால் இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்தார்.


பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவை 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சோனால் 3-1 என்ற கணக்கில் நைஜீரியாவின் ஒபியோரா வை தோற்கடித்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

தடகளம், பெண்களுக்கான ஹாமர் எறிதல் போட்டியில் மஞ்சு பாலா 59.68 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா