காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம்

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம்
X
பாட்மிண்டன் இரட்டையர் பிரிவு, டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியா தங்கம் வென்றது

பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். அதே போல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.


இது மட்டுமின்றி இந்திய அணிக்கு இன்று மேலும் சில போட்டிகள் எஞ்சியுள்ளன. குறிப்பாக ஆண்கள் ஆக்கி இறுதி போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் அணியின் தங்கப் பதக்க எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

22 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் 19 தங்கப் பதக்கத்தை வென்றுள்ள நியூசிலாந்து அணி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!