காமன்வெல்த் விளையாட்டு 2022, பேட்மிண்டனில் இந்தியாவிற்கு இரண்டு தங்கம்

காமன்வெல்த் விளையாட்டு 2022, பேட்மிண்டனில் இந்தியாவிற்கு இரண்டு தங்கம்
X

பி.வி.சிந்து, லக்சயா சென்

காமன்வெல்த் விளையாட்டு 2022, பேட்மிண்ட ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, லக்சயா சென் தங்கம் ஆகியோர் வென்றனர்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (CWG) 2022, இறுதி நாளான திங்கள்கிழமை பாட்மிண்டன் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முறையே பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து, காமன்வெல்த் விளையாட்டு 2022 இந்தியாவின் பதக்கங்கள் 57 ஆக உயர்ந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற கணக்கில் கனடாவின் மிச்செல்-லியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், லக்ஷ்யா சென் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் மலேசியா வீரர் ஸே யோங்கை வென்று தங்கம் வென்றார்

இந்தியா இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!