ஐபிஎல் 15 வது சீசனில் சிஎஸ்கே சுழலில் சிக்கிய ஆர்சிபி.

ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தீக்சனா 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மீண்டும் டாஸை இழந்த சிஎஸ்கே, ஆர்சிபி அணியால் பேட்டிங் செய்ய பணித்தது. இது சிஎஸ்கேவின் 200வது ஐபிஎல் போட்டி ஆகும்.
இந்த தொடரில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு, ஒரு பள்ளி அணியின் பந்துவீச்சை போல் மோசமாக இருந்ததால், பேட்டிங்கில் அதிக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் அதிரடியாக விளையாட முற்பட்டு 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் மொயின் அலி 3 ரன்களில் ரன் அவுட்டாக சிஎஸ்கே அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் ராபின் உத்தப்பா தனது வழக்கமான அதிரடியை காட்டினார் . பீஸ்ட் மோடுக்கு சென்ற ராபின் உத்தப்பா, மேக்ஸ்வெல் வீசிய 13வது ஓவரில் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசினார்.
சிவம் துபேவும் அதிரடியில் இணைய, இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. துபே 18 ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாச ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது. ஜடேஜா டக் அவுட்டாக அதிரடி காட்டிய துபே 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி நடப்பு சீசனின் அதிகபட்ச ஸ்கோராக 216 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே மொத்தமாக 17 சிக்சர் விளாசியது. இது சிஎஸ்கேவின் அதிகபட்ச சிக்சராகும்.
217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. இதனால் சிஎஸ்கே அணி முதல் ஓவரிலேயே மொயின் அலியை வைத்து பந்துவீசியது. இதனால் ஆர்சிபி தொடக்க வீரர்கள் திணறினர். இதனையடுத்து இலங்கை வீரர் தீக்சனா பவர்பிளேவில் பந்துவீச தொடங்கினார். அதனை எதிர்கொள்ள முடியாமல் ஆர்சிபி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி விக்கெட்டை முகேஷ் சௌத்ரி வீழ்த்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை 7வது முறையாக ஜடேஜா வீழ்த்தினார்.
இதனையடுத்து அறிமுக போட்டியில் விளையாடிய பிரபுதேசாய் 18 பந்துகளில் 34 ரன்கள் அடித்து தீக்சனா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். வெற்றி உறுதி என சிஎஸ்கே வீரர்கள் நினைத்த போது தினேஷ் கார்த்திக் பவுண்டரி சிக்சர் அடித்து கடும் நெருக்கடி அளித்தார். அப்போது கார்த்திக் 34 ரன்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழக்க, சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தீக்சனா 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu