தோனி 500! வாய்ப்பிருக்கா? வெறித்தனமான ரெக்கார்டு வைத்துள்ள தல!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதவுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் தோனி களமிறங்கி ஆட வாய்ப்பு கிடைக்குமா? அவர் மிகப் பெரிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் 28 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று ராஜஸ்தான், லக்னோ அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.
இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஆடி அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியையும் 3 தோல்வியையும் பெற்றுள்ளது. வெற்றி தோல்விகளைத் தாண்டி இரு அணிகளும் பேட்டிங்கில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆனால் சென்னை அணியின் பவுலிங் ஸ்க்வாட் கொஞ்சம் பலம் குறைந்ததாகவே இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் குஜராத் அணிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்திருந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 57 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக 40 ரன்களும் எடுத்தவர் அடுத்த இரண்டு ஆட்டங்களில் சொற்ப ரன்களில் அவுட் ஆகிவிட்டார்.
அஜிங்யா ரஹானோ மும்பை அணிக்கு எதிராக வான்கடேவில் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார். சென்னையில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மொயின் அலி லக்னோ அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். மும்பை அணிக்கு எதிராக வான்கடேவில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். டெவான் கான்வே அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் அரைசதம் அடித்தார்.
கான்வே, ருத்துராஜ், ரஹானே, மொயின் அலி, ஜடேஜா என பாஃர்மில் இருக்கும் வீரர்களும் தோனி மற்றும் டுபேவும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
இதேபோல, ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக், மயாங்க் அகர்வால். எய்டன் மார்க்ரம், அபிஷேக் ஷர்மா என அதிரடி பேட்ஸ்மன்களும்,
புவனேஷ்வர்குமார், நடராஜன், மார்கோ ஜான்சென், மயாங்க் மார்கண்டே என அதிரடி பவுலர்களும் இருக்கிறார்கள். இப்படி பலம் வாய்ந்த அணியின் பவுலிங் யூனிட்டை சமாளித்து இந்த போட்டியில் வெல்ல தோனி தலைமையிலான சென்னை அணி தயாராக இருக்கிறது.
இதுவரை ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி 18 போட்டிகளில் விளையாடி, 488 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆட்டத்தில் 12 ரன்கள் எடுத்தால் அவர் 500 ரன்களை எடுக்க முடியும். 145.24 ஸ்ட்ரைக் ரேட் வைத்து 48.80 சராசரியுடன் தோனி இன்று சேப்பாக்கத்தில் பந்துகளைப் பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu