CSK vs SRH ஹைதராபாத் அணி பேட்டிங்! பவர்ப்ளேவில் கலக்குவார்களா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஐபிஎல் 2023 இதுவரை
ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் 28 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று ராஜஸ்தான், லக்னோ அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.
இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஆடி அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியையும் 3 தோல்வியையும் பெற்றுள்ளது. வெற்றி தோல்விகளைத் தாண்டி இரு அணிகளும் பேட்டிங்கில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆனால் சென்னை அணியின் பவுலிங் ஸ்க்வாட் கொஞ்சம் பலம் குறைந்ததாகவே இருக்கிறது.
பலம் வாய்ந்த சென்னை பேட்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் குஜராத் அணிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்திருந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 57 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக 40 ரன்களும் எடுத்தவர் அடுத்த இரண்டு ஆட்டங்களில் சொற்ப ரன்களில் அவுட் ஆகிவிட்டார்.
அஜிங்யா ரஹானோ மும்பை அணிக்கு எதிராக வான்கடேவில் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார். சென்னையில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மொயின் அலி லக்னோ அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். மும்பை அணிக்கு எதிராக வான்கடேவில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். டெவான் கான்வே அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் அரைசதம் அடித்தார்.
கான்வே, ருத்துராஜ், ரஹானே, மொயின் அலி, ஜடேஜா என பாஃர்மில் இருக்கும் வீரர்களும் தோனி மற்றும் டுபேவும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
பேட்டிங், பவுலிங்கில் கலக்கும் ஹைதராபாத்
இதேபோல, ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக், மயாங்க் அகர்வால். எய்டன் மார்க்ரம், அபிஷேக் ஷர்மா என அதிரடி பேட்ஸ்மன்களும்,
புவனேஷ்வர்குமார், நடராஜன், மார்கோ ஜான்சென், மயாங்க் மார்கண்டே என அதிரடி பவுலர்களும் இருக்கிறார்கள். இப்படி பலம் வாய்ந்த அணியின் பவுலிங் யூனிட்டை சமாளித்து இந்த போட்டியில் வெல்ல தோனி தலைமையிலான சென்னை அணி தயாராக இருக்கிறது.
சென்னை அணி வீரர்கள்
Chennai Super Kings XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Shivam Dube, Ambati Rayudu, Moeen Ali, Ravindra Jadeja, MS Dhoni (c/wk), Maheesh Theekshana, Tushar Deshpande, Matheesha Pathirana
CSK Substitute Players: Ambati Rayudu, Shaikh Rasheed, S Senapati, Dwaine Pretorius, R Hangargekar
சென்னை சூப்பர் கிங்ஸ் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (சி/வாரம்), மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா
சிஎஸ்கே மாற்று வீரர்கள்: அம்பதி ராயுடு, ஷேக் ரஷீத், எஸ் சேனாபதி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆர் ஹங்கர்கேகர்
Sunrisers Hyderabad XI: Harry Brook, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (c), Heinrich Klaasen(wk), Abhishek Sharma, Washington Sundar, Marco Jansen, Bhuvneshwar Kumar, Mayank Markande, Umran Malik
CSK Substitute Players: Abdul Samad, Sanvir Singh, Glenn Phillips, Mayank Dagar, T Natarajan
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் XI: ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேட்ச்), ஹென்ரிச் கிளாசென்(வி.கே), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்
சிஎஸ்கே மாற்று வீரர்கள்: அப்துல் சமத், சன்விர் சிங், கிளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், டி நடராஜன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu