CSK Vs SRH ஹைதராபாத் அணி சொதப்பல் ஆட்டம்.... சென்னை அணி எளிதில் வெற்றி!

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஹேரி ப்ரூக், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர்.
துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் துவக்க பவுலிங்கைத் தொடங்கினர். முதல் 4 ஓவர்களுக்கு பெரிய அளவில் ரன்கள் தேறவில்லை. 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில், ஹேரி ப்ரூக் அவுட் ஆனார். ஆகாஷ் சிங் பந்துவீச்சில் ருத்துராஜ் கெய்க்வாட் கையில் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து அபிஷேக் சர்மா 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அஜிங்யா ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ராகுல் திரிபாதி 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவிடம் அவுட் ஆனார். அடுத்து மகீஷ் தீக்ஷனா ஓவரில் எய்டன் மார்க்ரம் அவுட் ஆக, அவருக்கு பிறகு களமிறங்கினார். இது போல அடுத்தடுத்து வீரர்களும் அவுட் ஆக மொத்த அணியும் சுமாராகவே ஆடியது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்திருந்தது.
சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினர் சென்னை அணியின் துவக்க வீரர்களான ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வே. துவக்கம் முதலே வேற லெவலில் ஆடியது.
விக்கெட் இழப்பின்றி வின்னிங் ரன் அடித்துவிடும் என ஒரு கட்டத்தில் நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டெவான் கான்வே அடித்த பந்து பவுலர் கையில் பட்டு எதிர்புறம் இருந்த ஸ்டெம்பில் விழுந்தது. துரதிஷ்டவசமாக ருத்துராஜ் வெளியில் இருந்ததால் அவுட் ஆகி வெளியேறினார்.
ருத்துராஜ் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து அஜிங்யா ரஹானோ 9 ரன்களும், அம்பத்தி ராயுடு 9 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். டெவான் கான்வே கடைசி வரை போராடிக் கொண்டிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத்தை வீழ்த்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu