CSK vs MI 2010க்கு பிறகு முதல் முறையாக மும்பையை வீழ்த்தியது சென்னை!

CSK vs MI 2010க்கு பிறகு முதல் முறையாக மும்பையை வீழ்த்தியது சென்னை!
X
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்தது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்தது.

மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக கேமரூன் க்ரீன் இஷான் கிஷனுடன் களமிறங்கினார். முதல் 3 விக்கெட்டுகளில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

கேமரூன் க்ரீன் 6

இஷான் கிஷன் 7

ரோஹித் சர்மா 0

என அவுட் ஆக, 3 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து சூர்யகுமார் களமிறங்கினார். நேஹல் வெதேராவுடன் இணைந்து இருவரும் நன்றாக விளையாடினர். பார்ட்னர்ஷிப் நன்றாக பில் ஆகும் நிலையில் ரவீந்திர ஜடேஜா சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தினார்.

சூர்யகுமார் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. நேஹல் 64 ரன்கள் குவித்து மும்பை மானத்தை காப்பாற்றினார்.

அடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் நன்றாக விளையாடினர்.

ருத்துராஜ் 30 ரன்களிலும், கான்வே 44 ரன்களிலும், ரஹானோ 21 ரன்களிலும் அவுட் ஆக, அம்பத்தி ராயுடு 12 ரன்களில் அவுட் ஆக டுபே, தோனி இருவரும் கடைசி நேரத்தில் களத்தில் நின்றனர். கடைசி பந்தில் 1 ரன் எடுத்து வெற்றிக்கான ரன்னை எடுத்தார் தோனி.

மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை.

Tags

Next Story