CSK vs GT குவாலிபஃயரில் வென்று நேரடியாக றுதிப் போட்டிக்கு செல்லுமா சென்னை அணி?

ஐபிஎல் என்று அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்று குஜராத் அணியும் சென்னை அணியும் முதல் இரு இடங்களைப் பிடித்தன. அடுத்த இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இருக்கிறது.
இந்நிலையில் இன்று இரவு இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணியும் முதலிடத்திலுள்ள குஜராத் அணியும் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியை எட்டும். தோற்கும் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணிக்கு எதிராக ஆடி வென்றால் மீண்டும் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
எப்போது துவங்கும்? Match Start Time
இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதே இல்லை. அப்படி இருக்கையில் இன்று நடைபெறும் போட்டியில் வெல்ல சென்னை அணியின் வியூகம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சென்னை Vs குஜராத் | CSK vs GT Prediction
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது. ஒருவேளை அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டு அவருக்கு பதில் வேறொரு வீரரை உள்ளே கொண்டு வரலாம் என சென்னை ரசிகர்கள் விரும்புகிறார்கள். ராஜ்வர்தன் ஒரு நல்ல மாற்று வீரராக இருப்பார் என்றாலும் இந்த சீசனில் ஆடி அவருக்கு அனுபவம் இல்லை என்பதால் அதே அணியுடன் செல்வார்கள்.
அதே நேரம் குஜராத் டைட்டன்ஸ் அணி விஜய் சங்கரை உள்ளே கொண்டு வரும். சாய் சுதர்ஷனை மாற்று வீரராக பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai super kings Players
RD Gaikwad, Devon Conway, AT Rayudu, Ajinkya Rahane, MM Ali, RA Jadeja, S Dubey, MS Dhoni(C), DL Chahar, TU Deshpande, M Theekshana
ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கோவி, அஜய் ராயுடு, அஜிங்க்யா ரஹானே, எம்எம் அலி, ராஜ் ஜடேஜா, சந்து துபே, எம்எஸ் தோனி(கள்), டல் சாஹர், து தேஷ்பாண்டே, எம் தீக்ஷனா
Gujarat Titans Players
Shubman Gill, HH Pandya(C), DA Miller, R Tewatia, D Shanaka, Wriddhiman Saha(wk), Rashid Khan, M Shami, Yash Dayal, MM Sharma, Noor Ahmad
ஷுப்மான் கில், ஹூ பாண்டியா(சி), டாக்டர் மில்லர், ஆர் தியோடியா, டி ஷனகா, விருத்திமான் சாஹா(வ), ரஷித் கான், எம் ஷமி, யாஷ் தயாள், எம்எம் ஷர்மா, நூர் அகமது
சென்னை அணியின் பலம் பவுலிங்கை விட பேட்டிங்கில்தான் அதிகம் இருக்கிறது. இதனால் குஜராத் அணி சென்னை அணியின் பேட்டிங்கை உடைக்க மிக சாதுர்யமாக திட்டமிடும்.
அதில் முக்கியமாக முகமது சமி, நூர் முகமது மற்றும் ரஷீத் கான் ஆகியோரது பவுலிங்கையும் சமாளிக்க வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு எதிராக இதுவரை 12 ஓவர்களை வீசி 68 ரன்களை விட்டுக் கொடுத்துள்ள முகமது ஷமி, 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த 6 விக்கெட்டுகளில் 3 தனது இரண்டாவது ஓவரில் ஷமி எடுத்த சிஎஸ்கே ஓபனர்களின் விக்கெட். அதுவும் குறிப்பாக டெவான் கான்வேவின் விக்கெட்டுகள்.
ருத்துராஜ் கெய்க்வாட் இதுவரை ஷமியிடம் விக்கெட்டை இழந்ததில்லை ஆனாலும் பெரிய அளவில் ரன்களும் அடித்ததில்லை. டெவான் கான்வே - 2 முறை அம்பத்தி ராயுடு - 2 முறை இவரது பந்து வீச்சில் அவுட் ஆகியுள்ளனர்.
டெவான் கான்வே இவரது முதல் 2 ஓவர்களை சரியாக கணித்து ஆடினால் போதும், ருத்துராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ருத்துராஜ் மட்டுமல்ல, இதுவரை ஷமி ரஹானேவை அவுட் ஆக்கியதில்லை. அதுமட்டமின்றி 50 பந்துகளில் 86 ரன்களை வெளுத்திருக்கிறார் ரஹானோ. ரஷீத் கானின் பந்துவீச்சில் மொயின் அலி இதுவரை 4 முறை அவுட் ஆகியிருக்கிறார். அதே நேரம் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நூர் முகமதுவும் ரஷீத் கானும் மிடில் ஓவர்களில் சென்னை அணிக்கு தொல்லை கொடுப்பார்கள். அதனை சாதுர்யமாக கையாண்டாலே போதும் சென்னை அணியால் நிறைய ரன்களைக் குவிக்க முடியும்.
சென்னை வீரர்கள் இருவர் அந்த அணியில் இருப்பதால், அவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். சென்னை மைதானத்தில் பல முறை ஆடி பழகி இருப்பார்கள். இதனால் பழகி போன மைதானத்தில் ரன் குவிக்க சாதகமான சூழ்நிலை நிலவும் அதே நேரம் இருவரும் ஏற்கனவே நல்ல பாஃர்மில் இருக்கிறார்கள்.
இரண்டு சதங்களுடன் 682 ரன்களைக் குவித்த சுப்மன் கில் இதுவரை டெல்லி அணிக்கு எதிராக மட்டுமே ஒற்றை இலக்க ரன்கள் அடித்திருக்கிறார். பெங்களூருக்கு எதிராக 104 ரன்களும், ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்களும், லக்னோ அணிக்கு எதிராக 94 ரன்களும், பஞ்சாப், மும்பை, சென்னை அணிகளுக்கு எதிராக அரை சதம், கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்கள் என கிட்டத்தட்ட அனைத்து அணிகளுக்கு எதிராகவும் நல்ல பாஃர்மில் இருக்கிறார். இதனால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்த வேண்டும்.
டெல்லி அணிக்கு எதிராக முதல் பேட்டிங் செய்து நல்ல ரன்களைக் குவித்தது சென்னை அணி. அதேநேரம் கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் பேட்டிங் செய்து தோற்றுப்போனது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தோனி என்ன முடிவு எடுப்பார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குஜராத் அணியின் பேட்டிங் வரிசை மிக பலமானதாக இருக்கிறது. ஆனால் சென்னை அணியின் பவுலிங் வரிசை கொஞ்சம் சுமாராக இருப்பதால், சேஸிங் செய்யவே விரும்புவார் என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu