IPL 2023 நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்ற சிஎஸ்கே!

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் சென்னை அணியின் துவக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
துவக்க வீரர்கள் வழக்கம்போல நிலைத்து நின்று ஆடினார்கள். ருத்துராஜ் 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். டெவான் கான்வே தனது பங்குக்கு 34 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.
ஷிவம் துபே 1 ரன்னிலும் அஜிங்க்யா ரஹானோ, அம்பத்தி ராயுடு இருவரும் தலா 17 ரன்களில் அவுட் ஆகினர். இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்திருந்தனர்.
ஜடேஜா 16 பந்துகளில் 22 ரன்கள் குவிக்க தோனி 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். மொயின் அலி கடைசியில் 1 சிக்ஸர் அடித்து 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்திருந்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களான சஹா மற்றும் சுப்மல் கில் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே சஹா அவுட் ஆக, கில் கொஞ்சம் நேரம் நிலைத்து ஆடி சென்னை அணி பந்து வீச்சாளர்களுக்கு பயம் கொடுத்தார்.
38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தவிர ரஷீத் கான் 30 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் சென்னை அணி 15
ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் நேரடியாக ஃபைனலுக்கு சென்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu