உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு நியூசிலாந்து 274 ரன் டார்கெட்
மிட்சலின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்தி வீரர்கள்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 274 ரன்கள் டார்கெட் ஆக நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை திருவிழா போட்டி கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா. இங்கிலாந்து. பாகிஸ்தான். வங்காளதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை ,நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளிகள் எடுக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாடும்.
அந்த வகையில் 21வது லீக் போட்டி தர்மசாலாவில் இன்று பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியினர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். நியூசிலாந்து அணியினர் முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தார்கள். முதல் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டு விக்கெட் பறிபோனது. அதனைத் தொடர்ந்து வந்த மிட்சலும் அவருடன் ஜோடி சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திராவும் நங்கூரம் போட்டு நின்று விட்டனர்.
ரவீந்திரா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா கேட்சை தவறவிட்டார். அதேபோல பும்ராவும் ஒரு கேட்சை தவறவிட்டார். இதன் காரணமாக அவர்களது ரன்கள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் அதன் பின்னர் வந்த வீரர்கள் மளமளவென சரிந்தனர் இதன் காரணமாக நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்சல் 130 ரன்கள் வைத்திருந்தார். அந்த வகையில் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வழங்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu