உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடி உள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது .இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ,நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நெதர்லாந்து, உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பதால் லீக் போட்டிகள் வரிசையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் தான் மோதிய அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பந்தடித்தது. அந்த அணியானது 282 ரன்கள் எடுத்திருந்தது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

பாகிஸ்தான் அணி வீரர்களின் வேகப்பந்துகளை எல்லாம் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அடித்து விரட்டினார்கள். இதன் காரணமாக தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியவர்கள் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களுக்கு மேல் எடுத்துக் கொடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள்.

150 ரன்கள் எடுத்த பின்னர் தான் ஒரு விக்கெட் விழுந்தது. தொடர்ந்து நிதானமாக அவர்கள் ஆடி ரன்களை குவித்தார்கள். ஆனாலும் இந்த போட்டியானது பாகிஸ்தான் பக்கமா அல்லது ஆப்கானிஸ்தான் பக்கமா என்று கூற முடியாத அளவிற்கு ஒரு திரில்லாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் விக்கெட் சரியவில்லை. இரண்டு விக்கெட்டுகள் மட்டும் தான் இழந்திருந்தது.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணியானது 49 வது ஓவரில் இலக்கை எட்டியது. இதன் காரணமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் ஆப்கானிஸ்தான் முன்னாள் உலக கோப்பை சாம்பியன் ஆன பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது அனைவரின் பார்வையும் தங்கள் பக்கம் திருப்பி உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியானது தான் சந்தித்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற மூன்று போட்டியில் தோல்வியை தழுவி இருந்ததால் அது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இதுவரை இருந்து வந்தது .இந்த நிலையில் பாகிஸ்தானை வென்றதன் மூலம் இரண்டு வெற்றிகளை அது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story