கிரிக்கெட்: உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய வீரர் கொடுக்கும் மரியாதையை பாருங்க..
உலககோப்பையின் மீது கால்களை வைத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்சல் மார்ஸ் அந்த கோப்பையை தனது காலடியில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி முடிவுற்றது. உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற 10 அணிகளில் 9 அணிகளை வென்ற இந்திய அணி இறுதியாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. லீக் போட்டிகளில் தோல்வியையே தழுவாத இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்திய ரசிகர்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பொதுவாக எந்த ஒரு விளையாட்டிலும் வெற்றி தோல்வி என மாறி மாறி தான் வரும். இறுதி போட்டியில் யாராவது ஒரு அணி தான் வெற்றி பெற முடியும். அந்த வகையில் இந்திய அணி வீரர்களை விட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க கூடிய சூழலை ஏற்படுத்தி உள்ளது.
ஆறாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தை விட்டு கோப்பையுடன் தங்கள் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்றதும் அந்த கோப்பைக்கு என்ன மரியாதை கொடுத்தார்கள் என்பது இப்போது வெளிவந்துள்ளது. பரிசளிப்பு விழா முடிந்த பின்னர் ஓட்டல் அறையில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் உலகக் கோப்பையின் மேல் இரண்டு கால்களையும் தூக்கி வைத்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
அது மற்ற சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி உள்ளது. போராடி பெற்ற உலக கோப்பைக்கு அதுவும் இந்திய திருநாட்டின் பிரதமர் மோடி வழங்கிய உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? இது இந்திய திருநாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி நம் நாட்டின் மீது பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் வேதனை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu