கிரிக்கெட்: சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி
வெற்றிக்களிப்பில் இந்திய அணி வீரர்கள்.
சொந்த மண்ணில் இங்கிலாந்தை இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் எளிதாக வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் விளையாடுவதற்காக வந்துள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் மேட்ச்சில் ஏற்கனவே மூன்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து முடிவுற்று உள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் ஒரு போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் மேட்ச் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின்னர் தள்ளாட்டத்தில் இருந்து மீண்டு 353 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 7விக்கெட்டுக்கு 219 ரன்கள் உடன் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது.மூன்றாவது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து307 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலை என்கிற வகையில் இங்கிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. ஆனால் அந்த அணியால் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 53.5 ஓவர்களில் 145ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் ஜெய் ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் தேவை கைவசம் 10 விக்கெட் இருக்கிறது என்ற தைரியத்தில் நமது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன் காரணமாக இந்த தொடரையும் இந்திய அணியானது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது சொந்த மண்ணில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu