டிவியில் ஒளிபரப்பாததால் ரசிகர்கள் கண்டனம் : நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா தோல்வி…

டிவியில் ஒளிபரப்பாததால் ரசிகர்கள் கண்டனம் :  நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா தோல்வி…
X

சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஷிகர் தவனும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கைப்பற்றியது.

அந்தப் போட்டித் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி தொடர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த நிலையில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவனும், சுப்மன் கில்லும் இறங்கினர். இருவரும் நிதானாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பெர்குசன் வீசிய 23 ஆவது ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் டிம் சௌதி வீசிய பந்தில் கேப்டன் ஷிகர் தவன் ஆட்டமிழந்தார். அவர் 72 ரன்களை குவித்தார்.

அதன் பிறகு தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், எதிர் முனையில் இருந்த ரிஷப் பந்த் 15 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 36 ரன்களிலும், வாசிங்டன் சுந்தர் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் அய்யர் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 300 தொட்டது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை குவித்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி, பெர்குசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான பின் ஆலன் 22 ரன்களிலும், கன்வே 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிட்சேல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன்னும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய அனைத்து பந்துகளையும் துவம்சம் செய்தனர்.

இதனால், அந்த அணியின் ஸ்கோர் மள மள என உயர்ந்தது. 47.1 ஓவரில் 307 என்ற இலக்கை அடைந்து நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களை குவித்தார். அவர் 5 சிக்ஸ், 19 பவுன்ட்ரிகளை விளாசினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தப் போட்டி 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

வியாபார நோக்கம்:

இந்திய அணி பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளும் ஸ்டார் ஸ்போட்ஸ், சோனி லைவ் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்புவது வழக்கம். ஆனால், நியூஸிலாந்து சுற்றுப்பயண போட்டிகள் அனைத்தும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதனால், அமேசான் பிரைம் வாட்டிகையாளர்கள் மட்டுமே போட்டியை காண முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விளம்பரநோக்கத்திற்காகவே இந்த முறை கடைபிடிக்கப்படுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எதிர்காலத்தில் நடக்கும் போட்டிகளுக்கும்இதுபோல் அமேசான் பிரைமுக்கே வியாபாரநோக்கோடு ஒளிபரப்பும் உரிமையை அளிக்கும் பட்சத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நிரந்தரமாகவே கிரிக்கெட் பார்ப்பதை அடியோடுநிறுத்தும் நிலைஏற்படும். இந்தியாச்சேர்ந்த ஒரு அணி மற்ற நாட்டில் விளையாடும்போது உள்நாட்டு ரசிகர்கள் காசு செலவழித்து யாரும்பார்க்கக விரும்ப மாட்டார்கள். இதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவேண்டும். விளையாட்டையும் வியாபாரநோக்கமாக்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil