குற்றாலத்துக்கு வாங்கோ! தடை நீங்கியதால் மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Kutralam Today News in Tamil
Kutralam Today News in Tamil-குற்றாலத்தில் குளிக்க விதிக்கப்பட்டிருந்து தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது.
தமிழகத்தின் கோடை காலம் வழக்கமாக மார்ச் மாத இறுதியில் துவங்கி ஏப்ரல், மே கடந்து ஜூன் மாத துவக்கம் வரை நிலைபெறும். இதனால் அந்தந்த சீசன்களுக்கு ஏற்றவாறு தமிழகத்தில் கோடை சுற்றுலாவுக்கும் மக்கள் செல்வார்கள். அதிக வெயில் சமயங்களில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வார்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். வழக்கமாக மே மாத இறுதி வாரங்களில் குற்றால சீசன் துவங்கும். ஆனால் இம்முறை முன்கூட்டியே துவங்கிவிட்டது.
ஏப்ரல் மாத இறுதியிலேயே அதிக நீர்வரத்து இருந்ததால் குற்றாலத்துக்கு பல சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியிருந்தனர். கடந்த சில நாட்களாக குற்றாலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வந்தது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது நீர் வரத்து குறைந்து மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றாலம் பழைய அருவி, புதிய அருவி, ஐந்தருவி, பாபநாசம் காரையாறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- today kutralam season live
- kutralam falls open today
- kutralam falls opening time today
- courtallam water falls today status
- Kutralam Today News in Tamil
- Kutralam Today live
- kutralam season today 2022
- courtallam season now
- kutralam today news
- kutralam season today
- kutralam season today 2023
- kutralam live today news
- Kutralam season today 2023 live
- today kutralam
- kutralam waterfalls today
- Kutralam Live Today
- today kutralam season
- kutralam live today
- today kutralam live
- kutralam news
- courtallam today
- courtallam season
- today courtallam season
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu