கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்.பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு

கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்.பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
X
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐ முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐ முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மும்பை, புனே நகரங்களில் மட்டும் பாதுகாப்பாக நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடருக்குள் கொரோனா நுழைந்துவிட்டது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தான் ஒட்டுமொத்தமாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லி அணியில் முதன்முதலில் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபெர்ஹாட்டிற்கு கொரோனா உறுதியானது. அதன்பின்னர் வீரர் மிட்செல் மார்ஷ், டிஜிட்டல் ஊழியர் ஆகாஷ் மானே, மசாஜ் தெரபிஸ்ட் - சேட்டன் குமார், அணி மருத்துவர் - அபிஜித் சல்வி என மொத்தமாக 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனையடுத்து அணி வீரர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக குவாரண்டைனில் இருந்து வந்தனர். இதன் காரணமாக நேற்று புனேவில் நடைபெற்ற டெல்லி - பஞ்சாப் போட்டிகள் கூட மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுவும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் தான் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று கடைசி நேரத்தில் மற்றொரு வீரருக்கு கொரோனா உறுதியானது. டெல்லி வீரர் டிம் செய்ஃபெர்ட் -க்கு கொரோனா உறுதியானது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதோடு, மற்ற வீரர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. உடனடியாக பிசிசிஐ-ம் அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.

டெல்லி அணியில் உள்ள கொரோனா, வேறு அணிகளுக்கும் பரவாமல் இருக்க, புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி அணியின் அடுத்த சில போட்டிகள் மும்பை நகரத்திலேயே நடத்தவுள்ளது. பயணத்தை குறைத்தால் கொரோனா பரவாது என இந்த முடிவு எடுத்தனர். அந்தவகையில் டெல்லி அணி அடுத்ததாக ராஜஸ்தானுடன் ஏப்ரல் 22ம் தேதி மோதுகிறது. இந்த போட்டியும் புனேவில் இருந்து மும்பை வான்கடேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!