ஐபிஎல் தொடரில் நுழைந்த கொரோனா.. போட்டிகள் நிறுத்தப்படுமா?

ஐபிஎல் தொடரில் நுழைந்த கொரோனா.. போட்டிகள் நிறுத்தப்படுமா?
X
ஐபிஎல் 15 வது சீசனில் கொரோனா முதல் முறையாக நுழைந்தது. இது பிசிசிஐயை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் 15 வது சீசனில் கொரோனா முதல் முறையாக நுழைந்தது. இது பிசிசிஐயை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரப்பிஸ்ட்டாடன பாட்ரிக்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் இருந்த மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மீண்டும் டெல்லி அணி வீரர்களுக்கு மறு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

இதில் எத்தனை வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து முடிவு தெரியவரும். இதனால் ஐபிஎல் போட்டிக்கு சிக்கல் ஏற்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இந்த பிரச்சினை குறித்து பிசிசிஐ ஏற்கனவே விதிகள் வகுத்துவிட்டன.

அதாவது ஒரு அணியில் குறைந்தபட்சம் 12 வீரர்கள் போட்டியில் விளையாட உடல் தகுதி பெற்று இருந்தால், அந்தப் போட்டி நிச்சயம் நடைபெறும். இந்த 12 பேரில் குறைந்தது 7 இந்திய வீரர்கள் இருக்க வேண்டும். தற்போது ஒவ்வொரு அணியிலும் 23 முதல் 25 வீரர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சம் 6, 7 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் எஞ்சியுள்ள வீரர்களை வைத்து போட்டியை நடத்தலாம். இதில் தகுதியுள்ள வீரர்களில் பெரும்பாலோனார் பந்துவீச்சாளர்களாகவோ, பேட்ஸ்மேன்களாகவோ இருந்தால், அது எதிரணிக்கு தான் சந்தோசம். ஆனால் குறைந்தபட்சமான 12 வீரர்களை கூட ஒரு அணியால் களமிறக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம்.

அப்படி இருக்க, அந்தப் போட்டி பின்னாளில் நடத்தப்படும். அப்படியும் போட்டி நடைபெறவில்லை என்றால் , எந்த அணியால் வீரர்களை நிறுத்த முடியவில்லையோ, அந்த அணி தோற்றதாக அறிவிக்கப்பட்டு எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த விதிகள் காரணமாக ஐபிஎல் போட்டிக்கு இம்முறை சிக்கல் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story