டோக்கியோ ஒலிம்பிக், துப்பாக்கி சுடும் போட்டி, சீன வீராங்கனை சாதனை, பதக்கப் பட்டியலை துவக்கினார்

டோக்கியோ ஒலிம்பிக், துப்பாக்கி சுடும் போட்டி,  சீன வீராங்கனை சாதனை, பதக்கப் பட்டியலை துவக்கினார்
X
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் சீன வீராங்கனை யாங் தங்க பதக்கத்தை வென்று புதிய சாதனைப்படைத்தார். பதக்கப்பட்டியலையும் துவக்கி வைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் சீன வீராங்கனை புதிய சாதனை படைத்து சீனாவின் பதக்கப்பட்டியலை துவக்கி வைத்தார்.

ஜப்பான் அசாக்கா ஷூட்டிங் ரேஞ்சில் நடைபெற்ற பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங்க் கியான் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்க மங்கை என்ற பெயரை தட்டிச் சென்றார்.

ரஷ்யாவின் ( ஆர்.ஓ.சி) அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சுவிட்சர்லாந்த் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

விளையாட்டுப் போட்டிகளின் முதல் சாம்பியனாக, யாங்குக்கு பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் வழங்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்க பதக்கத்தை வென்ற யாங் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.

"இந்த தங்கத்தை வென்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்" என்று யாங் கூறினார்.

மேலும் "போட்டியின் போது நான் அதிகம் யோசிக்கவில்லை, ஏனென்றால் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், என் இதயம் மிக வேகமாக துடித்துக் கொண்டிருந்தது, எனவே நான் நானாக இருக்க முயற்சித்தேன், என் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன். நீங்களே இருப்பதில் கவனம் செலுத்துங்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!