மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
X
மும்பையை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 158 ரன்களை மிக எளிதாக எடுத்து வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டாஸ் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் பங்கு பெற்ற டாஸில் வெற்றி பெற்றது தோனி. அவர் முதலில் சென்னை அணி ஃபீல்டிங் செய்யும் என அறிவித்தார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய வருமாறு அழைத்தார்.

களமிறங்கிய மும்பை சிங்கங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினர்.

தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் இரண்டு பவுண்டரிகளை அடித்து அந்த ஓவரில் அணியின் ஸ்கோர் 10 ரன்களாக ஆக்கினார். அடுத்த ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். அந்த ஓவரில் 6 ரன்கள் குவித்தது மும்பை அணி. அடுத்து சிசன்டா மகளா 3வது ஓவரை வீசினார்.

3வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகளை விரட்டி விட்டார். 4வது ஓவரை சிக்ஸருடன் வரவேற்ற ரோஹித், துஷார் தேஷ்பாண்டே வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

ரோஹித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து கேமரூன் கிரீன் களமிறங்கினார். தனது பங்குக்கு சில ரன்களை அடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் இஷான் கிஷன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கிரீனுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்திலேயே சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேற, மும்பை அணியின் ரன் வேகம் சரமாரியாக குறைந்தது. அடுத்து ஜடேஜா பந்து வீச்சில் கேமரூன் கிரீனும் அவுட் ஆகி வெளியேற 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி.

திலக் வர்மாவுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். அவரும் ரவீந்திர ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். 18 பந்துகளைச் சந்தித்திருந்த அவர் 22 ரன்கள் எடுத்திருந்தார். டிம் டேவிட்டுடன் டிரிஷ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கினார். 10 பந்துகளைச் சந்தித்த அவர் 5 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

டிம் டேவிட்டுடன் ஹிரிதிக் ஷோகைன் ஜோடி சேர்ந்தார். துஷார் தேஷ்பாண்டே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். இதனால் மும்பை ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் டிம்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கி ஆடி வருகிறது.

சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே, ருத்துராஜ் ஆகியோர் களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே கான்வே அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அஜிங்யா ரஹானோ உள்ளே வந்தார்.

முதல் ஓவரை நிதானமாக ஆடிய ரஹானே, அர்ஷத் கான் வீசிய ஓவரை பொளந்து கட்டினார். முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய அவர் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை வெளுத்து வாங்கினார். அடுத்து கேமரூன் கிரீன் ஓவரிலும் சிக்ஸர் விளாசி தன்னை நிரூபித்தார் ரஹானே.

பியூஸ் சாவ்லா ஓவரில் பேக் டூ பேக் பவுண்டரிகளை விளாசி அஜிங்யா ரஹானோ அரை சதம் அடித்தார். 19 ரன்களில் அரை சதம் அடித்தார் ரஹானோ. 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்து சென்னைக்கு பெரிய பலமாக இருந்தார்.

இந்நிலையில் ருத்துராஜுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். தன் பங்குக்கு 28 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், குமார் கார்த்திகேயா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பிறகு அம்பத்தி ராயுடு களமிறங்கினார்.

ஆட்டநேர முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்களை எளிதாக எட்டி மும்பை அணியை வீழ்த்தியது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!