CSK vs DC டெல்லியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

CSK vs DC டெல்லியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
X
CSK vs DC டெல்லியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். டெல்லி அணியின் பந்துவீச்சு முதலில் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால் முதல் இரு ஓவர்களில் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை. இருந்தாலும் சமாளித்து ஆடிய டெவான் கான்வே 13 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அக்ஷார் படேல் பந்து வீச எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

ருத்துராஜுடன் அஜிங்யா ரஹானோ அடுத்து ஜோடி சேர்ந்தார். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் தருவார்கள் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். அடுத்து சில ஓவர்களில் ரன்களை எடுத்தாலும் 18 பந்துகளில் 24 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து மொயின் அலி, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார்.

12 பந்துகளைச் சந்தித்து மொயின் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு பின் ரஹானே லலித் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 21 ரன்கள் எடுத்திருந்தார்.

ஷிவம் டூபே, அம்பத்தி ராயுடு சிறிது நேரம் களத்தில் நின்று கடகடவென ரன் சேர்த்தனர். 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து துபே அவுட் ஆக, ராயுடு 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

கடைசியாக களம் இறங்கிய தோனி 9 பந்துகளைச் சந்தித்து 20 றன்கள் எடுத்தார். அதில் 2 சிக்ஸர்களும் அடங்கும். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் துவக்க வீரரான டேவிட் வார்னர் டக் அவுட் ஆனார். அடுத்து பில் சால்ட் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். மிட்சல் மார்ஷ் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இவர்களுக்கு பிறகு களமிறங்கிய மனிஷ் பாண்டே 27 ரன்களும், ரஸ்ஸவ் 35 ரன்களும் எடுத்தனர். இவர்களின் ஆட்டத்தால் டெல்லி அணி கொஞ்சம் கௌரவமான ஸ்கோரை எட்டியது. ரிப்பல் படேல் 10 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அக்ஷார் படேல் பதிரனா பந்தில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags

Next Story