CSK Vs LSG தோனி இல்லை? முதல் வெற்றியை ருசிக்குமா சென்னை அணி?

CSK Vs LSG தோனி இல்லை? முதல் வெற்றியை ருசிக்குமா சென்னை அணி?
X
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் ஆட்டத்தின்போது முழங்காலில் அடிபட்டதால் தோனி ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டு தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தனது இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

ஐபிஎல் 2023ன் 4 வது நாள் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி சில இடங்களுக்கு தள்ளப்பட்டதால், இம்முறை சென்னை அணி வென்று, இந்த ஆட்டம் முதலே வெற்றியுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது.

ருத்ராஜ், கான்வே, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயின் அலி என மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. மேலும் தோனியின் தலைமை இந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது. கூடவே பந்துவீச்சாளர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹரும் அணியில் சேர்ந்துள்ளார்.

ஆடுகளம்

சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானதாகவே அமையும். டி20 போட்டி என்பதால் கூடுதல் பவுண்டரிகளுக்காக பிட்ச் தயார் படுத்தப்பட்டிருக்கும். நல்ல பேஸ் பவுலர்களுக்கு சாதகமானதாகவும் பிட்ச் மாறும். இரண்டாவது இன்னிங்க்ஸில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமானதாக மாற வாய்ப்பிருப்பதால் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுக்கும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தோனி சந்தேகம்

குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் ஆட்டத்தின்போது முழங்காலில் அடிபட்டதால் தோனி ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

விளையாடும் வீரர்கள்

Lucknow Super Giants: KL Rahul (c & wk), Kyle Mayers, Deepak Hooda, Nicholas Pooran, Marcus Stoinis, Ayush Badoni, Krunal Pandya, Avesh Khan, Ravi Bishnoi, Amit Mishra, Mark Wood

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்.), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, மார்க் வுட்

Chennai Super Kings: Devon Conway, Ruturaj Gaikwad, Ambati Rayudu, Ben Stokes, Moeen Ali, Ravindra Jadeja, MS Dhoni (c & wk), Dwaine Pretorius, Shivam Dube, Deepak Chahar, Simarjeet Singh

சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன், விக்கெட்கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், சிவம் துபே, தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!