டெல்லி அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
14-வது ஐபிஎல் சீசனின் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றது. டெல்லி அணி டாஸை வென்றது. பந்து வீச்சை தேர்வு செய்தது.
சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளெஸ்ஸி களம் இறங்கினர். டெல்லி வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக வீசி முதலில் டு பிளெஸ்ஸியையும், கெய்க்வாட்டையும் வீழ்த்தினர்.
களத்தில் மொயீன் அலி,சுரேஷ் ரெய்னா ஆகியோர் சேர்ந்து ரன் ரேட்டை படிப்படியாக உயர்த்தினர். ஸ்பின்னர்களை பயன்படுத்தி ரன் ரேட்டை குறைக்க முயற்சித்தது டெல்லி அணி. அஸ்வின் சுழலில் மொயீன் அலி 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். ஆனால், அடுத்த பந்திலேயே மொயீன் அலி அவுட்டானார்.
இதையடுத்து, ரெய்னா சிக்ஸர்களாக அடித்து அதிரடியாக விளையாடினார். 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அம்பதி ராயுடு 16 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் தோனி 2வது பந்தில் அவுட்டானார்.
ஜடேஜா மற்றும் சாம் கரண் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். ஜடேஜா 26 ரன்களை எடுத்தார். கரண் 34 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டத்தின் இறுதி பந்தில் அவுட்டானார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சென்னை அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. டெல்லி அணி, 189 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்கோடு விளையாடி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu