செஞ்சூரியன் டெஸ்ட்: 113 ரன் வித்தியாசத்தில் தெ.ஆ.வை வென்றது இந்தியா
செஞ்சூரியன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி, முதல் இன்னிங்சில் 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன் எடுத்தது. அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்குள் சுருண்டது.
இதையடுத்து, 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இதில் தென் ஆப்ரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே இந்தியா சேர்த்தது.
இதன் மூலம், தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் இந்தியா இருந்தது. வெற்றிக்கு 305 ரன்கள் தேவை என்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து இருந்தது.
இன்று, 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் டீன் எல்கர் நிதானமாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். அவரை பும்ரா வீழ்த்தினார். டி காக் 21 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேரினார். அடுத்து வந்த ரபாடா, இங்கிடி அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினர்.
இறுதியில், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu