Celebrity Cricket League 2023 : பஞ்சாப் டி ஷேர் Vs போஜ்புரி தபாங்ஸ்

2023ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டாவது போட்டியில் போஜ்புரி தபாங்ஸ் அணியை எதிர் கொள்கிறது பஞ்சாப் டி ஷேர். இந்த போட்டி இரவு 7 மணிக்குத் துவங்குகிறது.
முன்னதாக இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. மதியம் 2.30 மணிக்கு துவங்கிய இந்த ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய இரண்டு ஆட்டங்களும் ராய்ப்பூரில் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களில் யார் யார் விளையாடுகிறார்கள், எப்போது எங்கு எதில் போட்டியைக் கண்டு களிக்கலாம், நேரடி ஒளிபரப்பு எப்போது துவங்கும் உள்ளிட்ட தகவல்களை காண்போம்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023 போஜ்புரி தபாங்ஸ் அணியுடன் மோதும் பஞ்சாப் டி ஷேர் அணி ஆட்டம் துவங்கும் நேரம் இரவு 7 மணி.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மொத்தம் 8 அணிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. போஜ்புரி தபாங்ஸ் Bhojpuri Dabanggs, பெங்கால் டைகர்ஸ் Bengal Tigers, சென்னை ரைனோஸ் Chennai Rhinos, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் Kerala Strikers,மும்பை ஹீரோஸ் Mumbai Heroes, பஞ்சாப் டி ஷெர் Punjab De Sher, தெலுங்கு வாரியர் Telugu Warrior, கர்நாடகா புல்டோசர்ஸ் Karnataka Bulldozers என எட்டு அணிகள் களத்தில் சந்திக்கின்றன.
அணி வீரர்கள் விவரம் Punjab De Sher vs Bhojpuri Dabanggs: Squads
Bhojpuri Dabbangs
Manoj Tiwari, Ravi Kishan, Vikrant Singh, Aditya Ojha, Asgar Khan, Ayaz Khan, Jay Yadav, Vikas Singh Virappan, Ajhoy Sharma, Shailesh Sinha, Dinesh Lal Yadav, Parvesh Lal Yadav, Uday Tiwari, Anshuman Singh Rajpoot, Khesari Lal Yadav, Vikas Jha, Baivaw Rai, and Sudhir Singh.
போஜ்புரி தபாங்ஸ்
மனோஜ் திவாரி, ரவி கிஷன், விக்ராந்த் சிங், ஆதித்யா ஓஜா, அஸ்கர் கான், அயாஸ் கான், ஜெய் யாதவ், விகாஸ் சிங் விரப்பன், அஜோய் சர்மா, ஷைலேஷ் சின்ஹா, தினேஷ் லால் யாதவ், பர்வேஷ் லால் யாதவ், உதய் திவாரி, அன்ஷுமன் சிங் ராஜ்பூத், கேசரி லால் விகாஸ் ஜா, பைவாவ் ராய் மற்றும் சுதிர் சிங்
Punjab de Sher
Sonu Sood, Jimmy Shergil, Ayushmann Khurrana, Gurpreet Ghuggi, Binnu Dhillon, Jassie Gill, Rahul Dev, Gavie Chahal, Dev Kharoud, Gulzar Chahar, Babbal Rai, Aryaman Sapru, Navraj Hans, Yuvraj Hans,
Mukul Dev, Arjan Bajwa, Harmeet Singh
பஞ்சாப் டி ஷெர்
சோனு சூட், ஜிம்மி ஷெர்கில், ஆயுஷ்மான் குரானா, குர்பிரீத் குக்கி, பின்னு தில்லான், ஜாஸ்ஸி கில், ராகுல் தேவ், கேவி சாஹல், தேவ் கரூத், குல்சார் சாஹர், பாப்பல் ராய், ஆர்யமான் சப்ரு, நவ்ராஜ் ஹான்ஸ், யுவராஜ் ஹான்ஸ்,
முகுல் தேவ், அர்ஜன் பஜ்வா, ஹர்மீத் சிங்
ஒளிபரப்பாகும் சேனல்கள் Telecasting Channels
செலிபிரிட்டி கிரிக்கெட் ஏழு வெவ்வேறு சேனல்களில் ஜீ டிவி நெட்வொர்க்கில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும்.- ஜீ அன்மோல் சினிமா, & படங்கள் இந்தி, ஜீ சினிமா தெலுங்கு, ஜீ திரை தமிழ், ஜீ பிக்சார் கன்னடம், ஜீ பங்களா சினிமா, ஜீ பிஸ்கோப்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu