டை ஆனதால் சிஎஸ்கேவுக்கு சிக்கல்! ப்ளே ஆஃப் போக இத பண்ணியே ஆகணும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இயலுமா அப்படி செல்வதென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். லக்னோ உடனான இன்றைய ஆட்டம் டையில் முடிவடைந்ததால் சிஎஸ்கேவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆட்டங்களில் ஆடிவிட்டதால், சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த சென்னை அணி, தோனியின் தலைமையில் களம் புகுந்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா, கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். அவர்கள் உட்பட அடுத்து களமிறங்கிய கரண் ஷர்மா, க்ருணால் பாண்டியா, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் என யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து களமிறங்கிய பூரன் 31 பந்துகளைச் சந்தித்து 20 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஆயுஷ் பதோனி 33 பந்துகளில் 59 ரன்கள் அடித்து ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். 20வது ஓவர் வீசிக்கொண்டிருந்த போது மழைக் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.
பல மணி நேரமாக மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது லக்னோ அணியை விட சென்னை அணிக்கு பாதகமாக அமைந்துவிட்டது. காரணம் சென்னை அணி இந்த ஆட்டத்துடன் 10 போட்டிகளை ஆடி முடித்துவிட்டது. இனி வரும் 4 ஆட்டங்களில் அனைத்தையும் வென்றாக வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு வந்துள்ளது.
மழை நின்று ஆட்டம் தொடர்ந்திருந்தால் இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றியை பதிவு செய்திருக்கும் சென்னை அணி. ஆனால் இதில் ஒரு புள்ளி மட்டுமே பெற்றதால், மொத்தம் 11 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது சென்னை அணி.
அடுத்த 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே எந்த வித குழப்பமும் இல்லாமல் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இல்லையென்றால் 15 முதல் 17 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடிக்க மிகவும் போராடும். அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் 3 போட்டிகள் இருக்கின்றன. மேலும் டெல்லி அணியுடன் டெல்லி மைதானத்திலேயே ஒரு ஆட்டம் இருக்கிறது. இதில் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும். ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றாலும் மற்ற 3 போட்டிகளிலும் மிகப் பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் நாம் ஜெயிக்க வேண்டும். அதே சமயம் மற்ற போட்டி அணிகள் குறைந்த நெட் ரன்ரேட் எடுத்து தோற்க வேண்டும் என பல கணக்குகள் இருக்கின்றன.
இப்போது நடைபெற்று வரும் மும்பை Vs பஞ்சாப் போட்டியில் மும்பை ஜெயிக்க வேண்டும். அப்போது மும்பை 10 புள்ளிகளுடன் 6 அல்லது 7வது இடத்தில் இருக்கும்.
6. மும்பை - 10
7. பஞ்சாப் - 10
அடுத்த போட்டியில் ஹைதராபாத் Vs கொல்கத்தா விளையாட இருக்கிறது. இதில் ஹைதராபாத் அணி வெல்வதாகக் கொண்டால்,
8 ஹைதராபாத் - 8
9. கொல்கத்தா - 6
அடுத்த போட்டியில் RR Vs GT மோதலில் ராஜஸ்தான் அணியும், MI vs CSK மோதலில் சென்னை அணியும் வெல்வதாகக் கொள்வோம்.
1. சென்னை - 13
2.குஜராத் - 12
3.ராஜஸ்தான் - 12
6. மும்பை - 10
இப்படியே அடுத்த 3 ஆட்டங்களிலும் சென்னை வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu