IND vs ENG ODI: பூம் பூம் பும்ரா. இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல்-அவுட்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது .
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது வருகிறது.
ஆட்டத்தின் தொடக்கமே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 0, , ஜோ ரூட் 0, பென் ஸ்டோக்ஸ் 0, ஜானி பேர்ஸ்டா 7 லிவிங்ஸ்டன் 0 என 5 முக்கிய விக்கெட்டுகளை 26 ரன்களுக்கு இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த மொயீன் அலி 14 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பட்லர் 30 ரன்களில் ஷமி பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் 25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டும்,ஷமி 3 விக்கெட்,பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். குறிப்பாக பும்ரா 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இங்கிலாந்தில் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார்
இங்கிலாந்துக்கு ஒருநாள் போட்டியில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தனர்.
இதற்கு முன்பு ஒருநாள் போட்டியில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தது
- ஆஸிக்கு எதிராக 1983
- வெ. இண்டீஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் 1983
- பாக்கிற்கு எதிராக 1997
- இலங்கைக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் 2003
- பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2014
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர்கள்:
125 - ஜெய்ப்பூர் 2006
149 - சிட்னி 1985
155 - ராஞ்சி 2013
158 - கொச்சி 2013
161 - கார்டிஃப் வேல்ஸ் 2014
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu