உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

உலகக்கோப்பை கால்பந்து:  காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
X
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், குரோசியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன

32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு, . ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு நுழையும். அதன்படி, 16 அணிகள் 2வது சுற்றுக்கு தகுதிபெற்றன. இந்நி 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இதுவரை நெதர்லாந்து, அர்ஜெண்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றுகாலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

நள்ளிரவு 12.30 மணிக்கு தோகாவில் உள்ள ராஸ் அபு அபவுத் ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.

வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் குரோசிய வீரர்கள்

மற்றொரு 2வது சுற்று போட்டியில் ஜப்பான் -குரேஷியா அணிகள் மோதின. தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமநிலை வகித்தன. போட்டி நேரம் முடியும்வரை இரு அணிகளும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால், கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் காலிறுதியில் குரோசியா அணி பிரேசில் அணியை எதிர்கொள்ளும்

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின் மொரோக்கோ அணிகள் ஒரு ஆட்டத்திலும், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மற்றொரு ஆட்டத்திலும் மோதுகின்றன.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!