/* */

ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை

கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு, இங்கிலாந்தில், ரசிகர்களுடன் செல்பி எடுக்கக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ அதிரடியாக தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை
X

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. கொரோனா அலையால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதற்கிடையில், போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் பொது இடங்களில் சுற்றி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்கு பி.சி.சி.ஐ கண்டனம் தெரிவித்துள்ளது.இதுபோல ரசிகர்களுடன் செல்பி எடுக்கக்கூடாது எனவும், மேலும் அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் வீரர்கள் வெளியே செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

Updated On: 28 Jun 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்