பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: பார்பரா கிரெஜ்சிகோவா சாம்பியன்

பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: பார்பரா கிரெஜ்சிகோவா சாம்பியன்
X

பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: பார்பரா கிரெஜ்சிகோவா சாம்பியன் 

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவாவை செக் குடியரசை சேர்ந்த பார்பரா கிரெஜ்சிகோவா எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே பார்பரா கிரெஜ்சிகோவா ஆதிக்கம் செலுத்தினார். பரபரப்பாக நடந்த போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவாவை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை பெற்று பார்பரா சாதனை படைத்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!