இப்படியெல்லாமா உலக சாதனை படைப்பாங்க? என்னமோ போங்க

இப்படியெல்லாமா உலக சாதனை படைப்பாங்க? என்னமோ போங்க
X
டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி வித்தியாசமான உலக சாதனையை படைத்திருக்கிறது

இலங்கை- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இந்நிலையில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும் (135 ரன்), முஷ்பிகுர் ரஹிமும் (115 ரன்) ஆகியோர் சதம் அடித்து அணியை சரிவிலிருந்து காப்பாற்றினர். முதல் நாளில் வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. லிட்டான் தாஸ் 141 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 175 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இவர்கள் கூட்டாக திரட்டிய 272 ரன்கள், 6-வது விக்கெட்டுக்கு வங்காளதேச ஜோடியின் அதிகபட்சமாகும். 25 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து அதன் பிறகு ஒரு அணி 300 ரன்களை தாண்டியது இதுவே முதல் நிகழ்வாகும். ஒரு சந்தோஷப்பட வேண்டிய சாதனை.

அத்துடன் இன்னொரு வித்தியாசமான சோகமான சாதனையும் வங்காளதேசம் படைத்துள்ளது. அந்த அணியில் தமிம் இக்பால், ஹசன்ராய் உள்பட 6 வீரர்கள் ரன் ஏதுமின்றி டக்-அவுட் ஆனார்கள்.


145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் அடித்து, 6 வீரர்கள் டக்-அவுட் ஆனது இதுவே முதல்முறையாகும்.

சந்தோஷ சாதனை, சோகமான சாதனை இரண்டுமே ஒரே போட்டியில் படைத்துள்ளது வங்கதேச அணி

Tags

Next Story