டாஸ்சில் வென்றது பெங்களூரு, சென்டி மெண்டை தகர்க்குமா மும்பை இந்தியன்ஸ்

சென்னையில் நடக்கும், ஐ.பி.எல் - ன் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ்சை வென்று பத்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த 2013ம் ஆண்டு முதல் போட்டியில் வெற்றியை இழந்து வரும் மும்பை இந்தியன்ஸ் சென்டி மெண்டை தகர்க்க ரோஹித் போராடிவருகிறார்.

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ்சை வென்ற பெங்களூரு அணி வென்றது. கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 வருடங்களாக முதல் லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி வருகிறது. இந்த நிலையை இன்று மாற்றுமா என்று ரசிகர்கள் அவலுடன் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!