ஜடேஜாவின் அதிரடியால் சென்னையிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி

ஜடேஜாவின் அதிரடியான பேட்டிங், சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணியிடம், பெங்களூரு சரணடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டம் மும்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ருத்துராஜ், டூ பிளெஸ்ஸிஸ் பொறுப்பாக விளையாடினர்.

ருத்துராஜ் 33 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுததார். அடுத்து இறங்கிய ரெய்னா, டூ பிளெஸ்ஸிஸும் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.ரெய்னா 24 ரன்னிலும், டூ பிளெஸ்ஸிஸ் 50 ரன்களிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த ராயுடு அதிரடியாக ஆடினாலும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஜடேஜா அதிரடியாக விளையாடினார், ஹர்சல் விசிய கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க 20வது ஓவரில் 37 ரன்கள் குவித்து அசத்தினார் ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. ஜடேஜா 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 28 பந்துகளுக்கு 68 ரன்கள் குவித்தார்

பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கியது. படிக்கல் அதிரடியை வெளிக்காட்ட, விராட் கோலி நிதான போக்கை கையாண்டார். 3.1 ஓவரில் விராட் கோலி 8 ரன்னிலும் முதல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஷர்துல் தாகூர் வீசிய 5-வது ஓவரின் கடைசி பந்தில் 34 ரன்கள் எடுத்து நிலையில் படிக்கல் அவுட்டானார். பிறகு வந்த வாஷிங்டன் சுந்தர் (7), மேக்ஸ்வெல் (22), டி வில்லியர்ஸ் (4), ஆகியோர் ஜடேஜா சுழலில் சுருண்டனர். மேலும் ஜடேஜா டான் கிறிஸ்டியன் விக்கெட்டை ரன்அவுட் மூலம் வீழ்த்தினார்

அதன்பின் 20 ஓவர் வரை விளையாடி பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு பிரேக் போட்டது.

சாஹல் 8 ரன்களுடனும், முகமது சிராஜ் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்