/* */

பெங்களூரு அணி வெளியேறியது : கொல்கத்தா 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் எடுத்தனர்.கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சாளர்கள் சுனில் நரைன் 4 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஒப்பனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கி சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

பவர் பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே நல்ல நிலையில் விளையாடிய ராகுல் திரிபாதியின் விக்கெட்டை யுஸ்வேந்திர சஹால் எடுத்தார்.

இதன்பிறகு, வெங்கடேஷுடன் இணைந்து நிதிஷ் ராணா சிறிது நேரம் நிலைத்து ஆடினார். 26 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் படேல் பந்தில் விக்கெட்டை பறிக் கொடுத்தார் வெங்கடேஷ்.

கடைசி 9 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன. இதனால், ஆட்டம் சமநிலையில் இருந்தது.

சுனில் நரைன் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். இந்த முயற்சி கொல்கத்தாவுக்கு சாதகமாக அமைந்தது. சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். இதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவர் சந்தித்த முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்களை அடித்து ஆட்டித்தின் போக்கை மாற்றினார். அப்போதே பெங்களூரு அணியின் வீழ்ச்சி முடிவு செய்யப்பட்டு விட்டது.

சுனில் நரைன் களமிறங்கி 3 சிக்ஸர்கள் விளாசிய பிறகு 48 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை கொல்கத்தா அணிக்கு உருவானது.

எனினும், பெங்களூரு பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் போராடினர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அடுத்த இரண்டு ஓவர்களில் பவுண்டரிகள் போகவில்லை. இந்த நெருக்கடியில் சஹால் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் நிதிஷ் ராணா (23). சஹால் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதன் பின்னர், 17-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் வீசினார் இதில் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

18-வது ஓவரை வீச முகமது சிராஜ் வீச இரண்டாவது பந்திலேயே நரைன் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். நரைன் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதே ஓவரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் வீழ்த்தி சிராஜ் எடுத்தார்.

இந்த ஓவரில் 3 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் விழுந்ததால், கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை உருவானது. 19-வது ஓவரை சிறப்பாக வீசிய ஜார்ஜ் கார்டன் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி கொல்கத்தா அணியின் வெற்றியை தீர்மானித்தார் ஷகிப் அல் ஹசன். இதன்பிறகு, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது வெளியேறியது.

Updated On: 12 Oct 2021 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...