கெட்ட பெயர் வாங்குவதில் விராத் கோலியோடு போட்டியிடும் பாபர் அசாம்

கெட்ட பெயர் வாங்குவதில் விராத் கோலியோடு போட்டியிடும் பாபர் அசாம்
X

babar azam vs virat kohli - கிரிக்கெட் வீரர்கள் பாபர் அசாம் (பாகிஸ்தான்), விராத் கோலி (இந்தியா)

babar azam vs virat kohli - மோசமான விளையாட்டு வீரர் என கெட்ட பெயர் வாங்குவதில், விராத் கோலியோடு, போட்டியிடுகிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

babar azam vs virat kohli, virat kohli and babar azam comparison- விராட் கோலி நம்பர் 1 வீரரா, இல்லை பாபர் அசாமா என்ற கேள்வி பல காலமாக சமூக வலைதளங்களில் விவாத பொருளாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டினர் பாபர் அசாம் தான் நம்பர் 1 வீரர் என்றும், இந்திய நாட்டினர் விராட் கோலி தான் நம்பர் ஒன் வீரர் என்றும் மாறி மாறி புகழ்ந்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில காலமாக விராட்கோலி மோசமான பார்மில் இருந்து வந்தார். ஐபிஎல் போட்டிகளில் கூட சரியாக விளையாடவில்லை. மொத்த இந்திய அணிக்கும் இவரது இந்த நிலை, பெரும் பின்னடைவாக இருந்தது. விராத் கோலி அணியில் இருந்து விலக வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் போர்கொடி பிடித்தனர். விராட் கோலிக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று எல்லோரும் அவருக்கு எதிராக விவாதங்களை முன்வைத்தனர்.


இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டிகளில் மீண்டும் விராட் கோலி தன் பார்மை மீட்டெடுத்து அபாரமாக விளையாடினார். அதிரடி சதங்களும், அரை சதங்களும் அடித்து அனைவரையும் வாய்பிளக்க செய்தார். 20 ஓவர் உலக கோப்பைக்கு நான் தயார் என்பது போல் மீண்டும் எழுந்து வந்தார்.

இப்பொழுது விராட் கோலி எப்படி பார்ம் அவுட் ஆகி, மோசமான பேச்சுக்கள் வாங்கினாரோ, அதே போல் பாபர் அசாமும், மோசமான பெயர் வாங்கி வருகிறார். இவரின் சொதப்பல் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியும், பேட்டிங்கில் ஆட்டம் கண்டு வருகிறது.


டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு பாபர் அசாம் தனது பார்மை இழந்தது, பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விராட் கோலியை பிடித்த கெட்ட நேரம், இப்பொழுது பாபர் அசாமையும் பிடித்து ஆட்டி வருகிறது. ஒருவேளை நம்பர் 1 வீரர் யார் என்பதில், போட்டியிட்ட பாபர் அசாம், பேட்டிங்கில் சொதப்பி, கெட்ட பெயர் வாங்குவதிலும் விராத் கோலி உடன் போட்டியிடுகிறாரோ, என கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்,

Tags

Next Story