ஸ்கேட்டிங்: அவினாசி பழனியப்பா பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஸ்கேட்டிங்:  அவினாசி பழனியப்பா பள்ளி மாணவர்கள் அசத்தல்
X

மாவட்ட அளவிலான 'ஸ்கேட்டிங்' விளையாட்டில், அவினாசி மாணவ, மாணவியர் பதக்கங்களை பெற்றனர்.

மாவட்ட அளவிலான ‘ஸ்கேட்டிங்’ விளையாட்டில், அவினாசி பழனியப்பா பள்ளி மாணவ, மாணவியர் பதக்கங்களை பெற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோ பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், திருப்பூர் மாவட்டம், அவினாசி பழனியப்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் 'அச்சீவா அகாடமி' மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் பதக்கங்களை பெற்றனர்.

இந்த அகாடமி மாணவி பைரவி, 2 தங்கப்பதக்கம் வென்றார். மாணவர் தீபன், தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். மாணவி அருணா, தலா, 2 வெள்ளி வென்றார். மாணவி கயல், தலா, 2 வெண்கலம் வென்றார். மாணவன் பவித்ரன், ஒரு வெண்கலமும், மாணவன், தன்வந்த், ஒரு வெண்கல பதக்கமும் வென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பிரிவில், இந்த அகாடமி மாணவர்கள், மூன்றாம் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் குருசாமியையும், அகாடமி தாளாளர் மாதேஸ்வரிராஜ்குமார் வாழ்த்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்