வெண்கலம் வென்ற அவானி: ஒரே பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்று அசத்தல்!

வெண்கலம் வென்ற அவானி: ஒரே பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்று அசத்தல்!
X

இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லேகாரா

பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை 19 வயதில் படைத்துள்ளார்

அவானி லேகாரா, பாராலிம்பிக்கில் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் எஸ்எச் 1 வெண்கலப் பதக்கம் வென்று ஒரே போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

தங்கத்தை சீனாவின் ஜாங் கியூப்பிங் தங்கமும் ஜெர்மனின் நடாச்சா ஹில்ட்ராப் வெள்ளியும் வென்றனர். ஏற்கனவே 10 மீ ஏர் ரைஃபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் பெற்றார்.

ஜோகீந்தர் சிங் சோதி 1984 பாராலிம்பிக்கில் ஷாட் புட்டில் ஒரு வெள்ளி மற்றும் வட்டு மற்றும் ஈட்டி எறிதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் வென்று ஒரே போட்டியில் பல பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!