டி20 சாம்பியன் ஆஸ்திரேலியா: அனைத்துவகை கோப்பைகளையும் வென்று அசத்தல்

டி20 சாம்பியன் ஆஸ்திரேலியா: அனைத்துவகை கோப்பைகளையும் வென்று அசத்தல்
X

உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, முதல்முறையாக ஆஸ்திரேலியா, கோப்பையை தட்டிச் சென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, முதல்முறையாக ஆஸ்திரேலியா, கோப்பையை தட்டிச் சென்றது.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் , 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா உள்பட, 16 அணிகள் பங்கேற்றன. சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

துபாயில், நேற்றிரவு நடைபெற்றை போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அபாரமாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன், 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணிக்கு 173 ரன்கள் என்ற இமாலய இலக்கு, நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து, அதிர்ச்சி தந்தார். ஏமாற்றம் அளித்தார். எனினும், அந்த குறையை மற்றொரு துவக்க வீரர் வார்னர் போக்கினர். அவர், அதிரடியாக ஆடி ரன்மழை பொழிந்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து வலுவான அடித்தம் அமைத்தார்.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், தன் பங்கிற்கு நியூசிலாந்து வீரர்களின் பந்தை நாலாபுறமும் அடித்தார். மேக்ஸ்வெல்லும் தன் பங்கிற்கு அசத்தினார். முடிவில், 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், அதாவது 18.5வது ஓவரில், ஆஸ்திரேலிய அணி173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலைய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, ஐசிசி-யின் அனைத்து வகை கோப்பைகளையும் வென்று சிறப்பை சேர்த்துள்ளது. கடந்த 1987, 1999, 2003, 2007, 2015ம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கோப்பை, 2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!