பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா
ஆட்ட நாயகன் விருது பெற்ற கம்மின்ஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 318 ரன்னும், பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 264 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தானைக் காட்டிலும் 241 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 60 ரன்களும், அஹா சல்மான் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன்மூலம், இரண்டாவது டெஸ்டில் 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu