ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023: இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய துடுப்பு படகு வீரர்கள் அர்ஜூன் லால், அர்விந்த் சிங்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. -
"ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக வீரர்களை அனுப்பி இருக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டு போட்டிகளில் களம் காணும் நமது வீரர்கள் சிறப்பாக ஆடி, உண்மையான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தட்டும்," என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அர்ஜூன் லால், அர்விந்த் சிங் ஜோடி துடுப்பு படகுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி வெள்ளி வென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu