ஆசிய விளையாட்டு போட்டிகள்: பதக்கங்கள் குவிக்கும் இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகள்: பதக்கங்கள் குவிக்கும் இந்தியா
X

தடகள போட்டியில் தங்கம் வென்ற அவினாஷ் சாப்லே

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் பதக்கங்கள் குவித்த இந்தியா, துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், கோஃப், குத்துச்சண்டை ஆகியவற்றிலும் பதக்கங்களை வென்றது

ஆண்கள் 3,000 மீட்டா் ஸ்டீபிள்சே ஸில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 8 நிமிடம் 19.50 விநாடிகளில் இலக்கை எட்டி, போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார் . அவருக்கு அடுத்து வந்த இரு ஜப்பான் வீரா்களுக்கு வெள்ளி, வெண்கலம் கிடைத்தது.

இதன் மூலம், ஆசிய போட்டிகளின் இந்த விளையாட்டுப் பிரிவில் சாம்பியனான முதல் இந்திய வீரா் என்ற சாதனையை அவினாஷ் படைத்தார் முன்னதாக, 2010ம் ஆண்டில் இந்திய வீராங்கனை சுதா சிங் இதே பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமை பெற்றார்.

தற்போது நடைபெற்றுவரும் ஆசிய போட்டிகளின் தடகள பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும். ஆசிய போட்டிகளின் 3,000 மீட்டா் ஸ்டீபிள் சேஸில் இதற்கு முன், 2018-இல் ஈரானின் ஹுசைன் கிஹானி 8 நிமிஷம் 22.79 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அதனை அதை தற்போது அவினாஷ் முறியடித்துள்ளார்


ஆண்கள் குண்டு எறிதலில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் தஜிந்தா்பால் சிங் தூா், சி 20.36 மீட்டர் தூரம் வீசி தங்கத்தை தக்கவைத்துக் கொண்டார் . மற்றொரு இந்தியரான சாஹிப் சிங் 18.62 மீ தூரம் வீசி 8-ஆம் இடம் பிடித்தார் .

ஆண்கள் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் 8.19 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார் . சீனா வீரா்கள் இருவா் தங்கம், வெண்கலம் பெற்றனா். மற்றொரு இந்தியரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.76 மீட்டருடன் 8-ஆம் இடம் பிடித்தார் .

பெண்கள் 1,500 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் ஹா்மிலன் பெயின்ஸ் 4 நிமிடம் 12.74 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார் மற்றொரு இந்திய வீராங்கனை தீக்ஷா 9-ஆம் இடம் பிடித்தார்


ஆண்கள் 1,500 மீட்டா் ஓட்டத்தில் இந்தியா் வீரர்கள் அஜய்குமார் (3 நிமிடம், 38.94 விநாடிகள்), ஜின்சன் ஜான்சன் (3:39.74) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினா்..

பெண்கள் ஹெப்டத்லான் 800 மீட்டா் பிரிவில் இந்தியாவின் நந்தினி அகசரா 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார் சீனா, உஸ்பெகிஸ்தான் வீராங்கனைகள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்து தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் பெற்றனா்.

பெண்கள் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா புனியா தனது சிறந்த முயற்சியாக 58.62 மீட்டருடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பெண்கள் 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாராஜி 12.91 விநாடிகளில் இலக்கை எட்டி பிடித்து வெண்கலம் வென்றார். ஆனால், வெள்ளி வென்ற சீனாவின் யானி வு ‘ஃபௌல்’ செய்ததை அடுத்து, அவா் தகுதிநீக்கம் செய்யப்பட, ஜோதியின் வெண்கல பதக்கம் வெள்ளியாக மாற்றப்பட்டது


துப்பாக்கி சுடுதல் பிரிவின் டிராப் 50 ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் கினான் செனாய், ஜோராவா் சந்து, பிருத்விராஜ் தொண்டைமான் கூட்டணி 361 புள்ளிகள் பெற்று போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது. குவைத், சீனா அணிகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

ஆண்கள் தனிநபா் பிரிவில் கினான் செனாய் 32 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சீனா, குவைத் வீரா்கள் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். மற்றொரு இந்தியரான ஜோராவா் சிங் சந்து 23 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தார்.

டிராப் 50 பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ராஜேஷ்வரி குமார், மனீஷா கீா், பீரித்தி ரஜக் இணைந்து 337 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனா். சீனா தங்கம் வென்றது, , கஜகஸ்தான் வெண்கலம் வென்றது.

நடப்பு ஆசிய போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவை இந்தியா, 7 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது. போட்டி வரலாற்றின் இந்த விளையாட்டுப் பிரிவில் இந்த பதக்கங்களின் எண்ணிக்கையே இந்தியாவின் அதிகபட்சமாகும்.

கோல்ஃப் விளையாட்டில் பெண்கள் தனிநபா் பிரிவில் இந்தியாவின் அதிதி அசோக் 271 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் . ஆசிய போட்டிகளின் பெண்கள் கோல்ஃபில் இது இந்தியாவின் முதல் பதக்கம். தாய்லாந்து,.

ஆண்கள் தனிநபா் பிரிவில் இந்தியாவின் அனிர்பன் லாஹிரி, ஹிதேஷ் ஜோஷி, சவ்ராசியா, சுபாங்கா் சா்மா முறையே 12, 27, 29, 32 ஆகிய இடங்களைப் பிடித்தனா். ஆண்கள் அணிகள் பிரிவில் இவா்கள் கூட்டணிக்கு 7-ஆம் இடம் கிடைத்தது.

பாட்மிண்டன் ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கம். இதற்கு முன் இப்பிரிவில் இந்தியா 1986-இல் வெண்கலம் வென்றிருந்தது. போட்டி வரலாற்றில் பாட்மின்டனில் பாட்மிண்டன் இத்துடன் மொத்தமாக 11 பதக்கங்கள் வென்றிருக்கிறது.

பெண்களுக்கான 50 கிலோ பிரிவு குத்துசண்டை அரையிறுதியில் இந்தியாவின் நிகாத் ஜரீன் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தின் ரக்சத் சுதாமத்திடம் வெற்றியை இழந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். பெண்கள் 57 கிலோ பிரிவு காலிறுதியில் பா்வீன் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சிதோரா தா்டிபெகோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் . இதையடுத்து அவருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பு உறுதியானது..

இதையடுத்து பதக்க எண்ணிக்கையில் இந்தியா அரைசதம் கடந்தது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!