ஆசிய கோப்பை கிரிக்கெட்: பொருளாதார சிக்கலிலும் பொங்கியெழுந்த இலங்கை அபார வெற்றி

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.
பின்னர் பனுகா ராஜபக்சா, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் பனுகா ராஜபக்ச அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியில் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் 2012ஆம் ஆண்டிற்கு பிறகு கோப்பையை வெல்லலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணியினரின் மிரட்டும் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பொருளாதார சிக்கலிலும் பொங்கியெழுந்த இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளதால், இலங்கை வீரர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆசிய கோப்பை, இதுவரை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மட்டுமே நடைபெற்றது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்தியா சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இது 2016 ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் தோனியின் கீழ் தொடக்க ஆசியக் கோப்பை T20 போட்டியை வென்றது மற்றும் 2018 இல் அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஆசிய கோப்பை வென்றவர்கள் பட்டியல்
1984 – இந்தியா
1986 – இலங்கை
1988 – இந்தியா
1990/91 – இந்தியா
1995 – இந்தியா
1997 – இலங்கை
2000 – பாகிஸ்தான்
2004 – இலங்கை
2008 – இலங்கை
2010 – இந்தியா
2012 – பாகிஸ்தான்
2014 – இலங்கை
2016 - இந்தியா
2018 - இந்தியா
2022 - இலங்கை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu