இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று
X

ரவிச்சந்திரன் அஷ்வின்

Today Cricket News in Tamil -இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட செல்வதற்காக விமான நிலையம் வந்த அவருக்கு தொற்று உறுதியானது

Today Cricket News in Tamil - இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ள 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்ற அஸ்வினுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஸ்வின் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை . தற்போது அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

ஜூலை 1-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் திட்டமிடப்பட்ட டெஸ்டில் அஷ்வின் சரியான நேரத்தில் விமானத்தில் ஏறுவாரா என்பது குறித்து தெரியவில்லை.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி , இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 2-1 என முன்னிலை வகிக்கும் தொடரை நிறைவு செய்ய லண்டன் சென்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதிகளின்படி, அனைத்து வீரர்களும் RT-PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அஸ்வினின் சோதனை முடிவுவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது