/* */

அஷ்வின் அதிரடி: நடையை கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

HIGHLIGHTS

அஷ்வின் அதிரடி: நடையை கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்
X

அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடித்தந்த ரவிச்சந்திரன் அஷ்வின்

ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் ஒரு சிக்சர், 5 பவுண்டரி அடித்தார் . அந்த ஒரே ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார். மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

கான்வே, ராயுடு, ஜெகதீசன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கேப்டன் தோனி - மொயின் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் தோனி 26 ரன்கள் எடுத்தநிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால், மெக்காய் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் 15 ரன்களிலும், படிக்கல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் 39 பந்துகளில் அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், சோலாங்கி வீசிய 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 15-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து இருந்தது.

கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் - ஹெட்மயர் ஜோடி சேர்ந்தனர். ஹெட்மயர் 6 ரன்களில் நடையை கட்டினார், இருப்பினும் ஒரு பக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து அதிரடி காட்டினார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட 2 பந்து மீதம் இருக்க ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


அஸ்வின் 23 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் தற்போது 2-வது இடத்தில் உள்ளது.

முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும்

Updated On: 20 May 2022 7:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!