/* */

டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் முதலிடத்தில் அஸ்வின்.. பவுலிங்கில் அசத்தல்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

HIGHLIGHTS

டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் முதலிடத்தில் அஸ்வின்.. பவுலிங்கில் அசத்தல்
X

அஸ்வின்

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்குப்பின், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதில் முன்னணியில் இருப்பவர் விராட் கோஹ்லி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப்பின், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். இதன்மூலம் ஏழு இடங்கள் முன்னேறி பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங்கில் உலகின் நம்பர் 1 பேட்டர் தரவரிசையில் இருந்த கோஹ்லி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டாப் 10 லிருந்து வெளியேறினார்.


தற்போது ஏழு இடங்கள் முன்னேறியதன் விளைவாக, அவர் இந்தியாவின் அதிகபட்ச இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் ஆவார். ரிஷப் பந்த் 5ம் இடத்திலும், ரோஹித் ஷர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.


நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனின் அசத்தல் பவுலிங்கே காரணம்.

இவர் 3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சுகளிலும் சேர்த்து மொத்தம் 13 விக்கெட்டுகளை குவித்துள்ளார் அஸ்வின்.

அஸ்வினின் அசத்தல் பவுலிங்கால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார் .


இந்த நிலையில், டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 3வது இடத்தில் இருந்த அஸ்வின், 900 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அஸ்வின் தனது டெஸ்ட் வரலாற்றில் பெற்ற அதிக பாயிண்ட் இதுவாகும். முன்னதாக ஜூலை மாதம் சிறிது காலம் முதலிடம் பிடித்த அஸ்வினிடமிருந்து, தென் ஆப்பிரிக்க பவுலர் ஸ்டெயின் அந்த இடத்தை தட்டிச் சென்றிருந்தார். ஸ்டெயின், 878 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்தின் ஆண்டர்சன் 870 புள்ளிகளுடன், 3வது இடத்திலும் உள்ளனர். 7வது இடத்தில் 805 புள்ளிகளுடன், மற்றொரு இந்திய ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். மொத்தம், 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் அஸ்வின்.

Updated On: 16 March 2023 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  7. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  8. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  9. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  10. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...