டி20 தொடரில் சாதித்த அர்ஷ்தீப் சிங் !
24 வயதான அர்ஷ்தீப் சிங் டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது ஒரு சாதனையாகும். அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார். மிக இளம் வயதில் குறைந்த தொடரிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் 2022 இல் இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்த இவர் அன்றிலிருந்து ஒரு முக்கிய பந்துவீச்சாளராக மாறிவிட்டார். இவர் டி20 கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது ஒரு இளம் வீரர் விரைவாக செய்த சாதனையாகும்.
அர்ஷ்தீப் சிங் சிங் ஒரு வேகமான பந்துவீச்சாளர், அவர் 140 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். அவர் ஒரு நல்ல யார்க்கர் வீச்சாளர் மற்றும் அவர் அடிக்கடி விக்கெட்டுகளை எடுக்கிறார்.
அர்ஷ்தீப் சிங் சிங் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய பலமாக இருப்பார் என்று கணித்துள்ளனர் பல முன்னாள் வீரர்கள். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக அணிக்கு பல நேரங்களில் உதவி செய்வார் என்றும் கூறியுள்ளனர்.
140 கிமீ வேகத்தில் பந்து வீசும் இவர் பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் விக்கெட் எடுப்பதிலும் வல்லவராக திகழ்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரையடுத்து அயர்லாந்து தொடரிலும் பங்குபெற்றார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஒரு ஓவரிலேயே 22 ரன்களை விட்டுக் கொடுத்து பலரது பேச்சுக்களையும் வாங்கினார் அர்ஷ்தீப். இப்போது இரண்டாவது ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதன் மூலம் அதிக வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் அர்ஷ்தீப். 33 போட்டிகளில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். குல்தீப் யாதம் 29 போட்டிகளில் இந்த மாதிரி ஒரு சாதனையை படைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu