முதல் முறை களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர்! பந்து வீச்சு எப்படி?

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் மகன் அர்ஜூன். அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அவர்தான் முதல் ஓவரையே வீசினார்.
ஐபிஎல் தொடரின் 2023 சீசன் கடந்த மார்ச் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, மும்பை அணியை எதிர்கொண்டு வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் விளையாடிய அதே அணிக்காக அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கியிருக்கிறார். அவர் பார்ப்பதற்கு நல்ல உயரமாகவும் உடல் வலுவுடனும் காட்சியளிக்கிறார். முக்கியமாக வேகப்பந்து வீச அது முக்கியமான விசயமாகும். இது நேரடியாகவே அவரது பவுலிங்குடன் தொடர்புடையது. அதேநேரம் அவரின் முதல் ஆட்டத்தில் கொஞ்சம் நடுக்கமாகவே இருந்ததை பார்க்கமுடிந்தது.
அர்ஜூன் டெண்டுல்கர் ஓடும்போது கொஞ்சம் பிரச்னை இருப்பது போலவே தோன்றுகிறது. இது அவர் காயமடைவதற்கு காரணமாக அமையலாம்.
முதல் ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் நோ பால், வொய்டு எதுவும் வீசவில்லை. அவரது பந்துவீச்சில் முதல் ஓவரில் 4,6 எதுவும் போகவில்லை என்றாலும் அவரது பவுலிங் ஸ்பீடு பெரிய வேகமெடுக்கவில்லை. இரண்டாவது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் ஒரு சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu