அனுஷ்கா - கோஹ்லி தம்பதியினருக்கு ஆண் குழந்தை!
வமிகாவுக்கு பிறகு அடுத்த குட்டி வாரிசு... அனுஷ்கா - கோஹ்லி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறப்பு?
செலிபிரிட்டி குடும்பங்களில் குழந்தைச் செய்திகள் என்றாலே பரபரப்பும் கொண்டாட்டமும் தான்... விளையாட்டு, சினிமா... எந்தத் துறையானாலும் பிரபலங்களின் வாரிசுகள் என்றாலே ஒரு தனி கவனம் இருக்கும் இல்லையா? அந்த வகையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோஹ்லி - நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா ஷர்மா. இதனால் விராட் கோலி - அனுஷ்கா தம்பதி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அனுஷ்காவும், விராட்டும் வெறும் பிரபல ஜோடி மட்டுமல்ல...இன்றைய தலைமுறைக்கு உறவுகளின் மீதான நம்பிக்கையை அளிக்கும் முன்னுதாரணங்கள். விளம்பர படப்பிடிப்பின் போது சந்தித்துக் கொண்டு, நட்பிலிருந்து காதலாக மலர்ந்து, பல சவால்களைத் தாண்டி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தவர்கள். அவர்களின் முதல் குழந்தை வமிகாவின் பிறப்பை ரகசியமாக வைத்திருந்தாலும், இப்போது விரைவில் அதிகாரப்பூர்வமாக மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆண் குழந்தை என்று தகவல்கள் பரவ, ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். வமிகாவிற்கு தனியுலகம் அமைத்து கொடுப்பதில் குறியாக இருக்கும் இவர்கள், தங்களின் இரண்டாவது குழந்தையின் வருகையால் வலுவான குடும்ப அமைப்பிற்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றனர். ஒருவருக்கொருவர் துணையாக, குழந்தை வளர்ப்பிலும் சரிசம பங்கு... இதுதான் இவர்களது வழி!
ஆண், பெண் என்று இரு குழந்தைகள்... இனி அந்த வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதுவரை புகைப்படம் வரலாம் வராமலும் போகலாம். இது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஒரு புதிய உயிர் இந்த உலகத்திற்கு வந்திருப்பதே மகிழ்ச்சி தானே? விராட் - அனுஷ்காவுக்கு நம் வாழ்த்துக்கள்!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu